பாடல் 759
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாத்தா தானம் தத்தன தனதனதாத்தா தானம் தத்தன தனதனதாத்தா தானம் தத்தன தனதனதனதான
பாடல் வரிகள்
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடுபோர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன்விடுதூதும்
போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையதுபூட்டா மாயங் கற்றமை விழியினரமுதூறல்
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்படவாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமதமகிலாரம்
மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்வாக்கால் ஞானம் பெற்றினி வழிபடஅருளாயோ
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமைகூத்தா டாநந் தச்சிவை திரிபுரையாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவிபுவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுறநோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளையாட்டா லீசன் பக்கம் துறைபவள்பெறுசேயே
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடுநீத்தார் ஞானம் பற்றிய குருபரயாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தருமுருகோனே
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடுவாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்யாழ்ப்பா ணாயன் பட்டின மருவியபெருமாளே.
