பாடல் 75
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- ஸிம்மேந்திர மத்யமம்
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தந்த தானன தனதன தனதனதந்த தானன தனதன தனதனதந்த தானன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரிகுஞ்சி கூர்விட மதர்விழி பிலவகபங்க வாண்முக முடுகிய நெடுகியதிரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதலமிஞ்சி நீடிய கருமுகி லுருவொடுபண்பி லாதொரு பகடது முதுகினில்யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொருதஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்அன்பி னாலுன தடிபுக ழடிமையெனெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபடஎண்டி சாமுக மடமட நடமிடும்அந்த மோகர மயிலினி லியலுடன்வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு மிளகியரஞ்சி தாம்ருத வசனமு நிலவெனவந்த தூயவெண் முறுவலு மிருகுழையளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகியகுன்ற வாணர்த மடமகள் தடமுலைமந்த ராசல மிசைதுயி லழகியமணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசைவிஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்துதிங்கள் வேணியர் பலதளி தொழுதுயர்மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதிதொண்ட ராதியும் வழிவழி நெறிபெறுசெந்தில் மாநக ரினிதுறை யமரர்கள்பெருமாளே.
