உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 736

காணொ ணாதது உ ருவோ டருவது

ராகம்
மாண்ட்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தான தானன தனனா தனதனதான தானன தனனா தனதனதான தானன தனனா தனதனதந்ததான

பாடல் வரிகள்

காணொ ணாதது உ ருவோ டருவதுபேசொ ணாதது உ ரையே தரவதுகாணு நான்மறை முடிவாய் நிறைவதுபஞ்சபூதக்

காய பாசம தனிலே யுறைவதுமாய மாயுட லறியா வகையதுகாய மானவ ரெதிரே யவரெனவந்துபேசிப்

பேணொ ணாதது வெளியே யொளியதுமாய னாரய னறியா வகையதுபேத பேதமொ டுலகாய் வளர்வதுவிந்துநாதப்

பேரு மாய்கலை யறிவாய் துரியவதீத மானது வினையேன் முடிதவபேறு மாயருள் நிறைவாய் விளைவதுஒன்றுநீயே

வீணொ ணாதென அமையா தசுரரைநூறி யேயுயிர் நமனீ கொளுவெனவேல்க டாவிய கரனே யுமைமுலையுண்டகோவே

வேத நான்முக மறையோ னொடும்விளையாடி யேகுடு மியிலே கரமொடுவீற மோதின மறவா குறவர்குறிஞ்சியூடே

சேணொ ணாயிடு மிதண்மே லரிவையைமேவி யேமயல் கொளலீ லைகள்செய்துசேர நாடிய திருடா வருடருகந்தவேளே

சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்ஞான யோகிக ளுளமே யுறைதருதேவ னூர்வரு குமரா வமரர்கள்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →