பாடல் 724
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உ ருமாற
- தலம்
- சிறுவை
- ராகம்
- ஸிந்து பைரவி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - கண்டசாபு (2 1/2)(எடுப்பு - 3/4 தள்ளி)தந்ததன தனதான தந்ததன தனதானதந்ததன தனதானதனதான
பாடல் வரிகள்
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உ ருமாறஅண்டர்மன மகிழ்மீறவருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூரஐங்கரனு முமையாளுமகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேருமஞ்சினனு மயனாருமெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூறமைந்துமயி லுடனாடிவரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளாபுந்திநிறை யறிவாளவுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடுபொன்பரவு கதிர்வீசுவடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செற§ருபதண்டமிழின் மிகுநேயமுருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியானதண்சிறுவை தனில்மேவுபெருமாளே.
