பாடல் 711
உ ருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
- தலம்
- திருப்பேர்ருர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தா தான தந்த தனத்தா தான தந்ததனத்தா தான தந்ததனதான
பாடல் வரிகள்
உ ருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்உ கப்பார் வால சந்த்ரனுதனூலாம்
உ ருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்டலுவப்பா மேல்வி ழுந்துதிரிவோர்கள்
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்பவலைக்கே பூணு நெஞ்சனதிபாவி
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்தஅவத்தா லீன மின்றியருள்வாயே
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கையினைச்சூ டாதி நம்பர்புதல்வோனே
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சிலிருப்பா யானை தங்குமணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்றதிறற்சேர் வேல்கை கொண்டமுருகோனே
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்கதிருப்போ ரூர மர்ந்தபெருமாளே.
