பாடல் 690
அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
- தலம்
- திருமயிலை
- ராகம்
- பூர்வி கல்யாணி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (10 1/2)தகிட-1 1/2, தகதிமி-2தகதிமி-2, தகதிமிதக-3தனன தானன தானன தந்தத்தனதான
பாடல் வரிகள்
அறமி லாவதி பாதக வஞ்சத்தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற்றிளையாதே
திறகு லாவிய சேவடி வந்தித்தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத்தருவாயே
விறல் சாசரர் சேனைக ளஞ்சப்பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப்புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற்புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப்பெருமாளே.
