பாடல் 688
அமரு மமரரினி லதிக னயனுமரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதனன தனன தனதனனதனன தனதனனதனதான
பாடல் வரிகள்
அமரு மமரரினி லதிக னயனுமரியவரும் வெருவவருமதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரணமமைய னவர்கரணஅகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுனநிமிர சமிரமயநியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவரநினது பதவிதரவருவாயே
சமர சமரசுர அசுர விதரபரசரத விரதஅயில்விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகுதரர ரரரரிரிதகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வருமிமைய மகள்குமரஎமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையுமெமது பரகுரவபெருமாளே.
