பாடல் 686
கரியமுகில் போலு மிருளளக பார
- தலம்
- திருவொற்றியூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தனதனன தானதனதனன தானதனதான
பாடல் வரிகள்
கரியமுகில் போலு மிருளளக பாரகயல்பொருத வேலின்விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீரகளனமுலை தோயஅணையூடே
விரகமது வான மதனகலை யோதுவெறியனென நாளுமுலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறிவிடுவதன்முன் ஞானஅருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்அவர்கள்புக ழோதபுவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜஅமரர்குல நேசகுமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்திகழ் கநக மேனியுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவுஜெயமுருக தேவர்பெருமாளே.
