பாடல் 684
மின்னிடைக லாப தொங்கலொ
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தய்யதன தான தந்தனதய்யதன தான தந்தனதய்யதன தான தந்தனதனதான
பாடல் வரிகள்
மின்னிடைக லாப தொங்கலொடன்னமயில் நாண விஞ்சியமெல்லியர்கு ழாமி சைந்தொருதெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கிதசொல்குயில்கு லாவி நண்பொடுவில்லியல்பு ரூர கண்கணைதொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறுமின்னணிக லார கொங்கையர்கண்ணியில்வி ழாம லன்பொடுபதஞான
கண்ணியிலு ளாக சுந்தரபொன்னியல்ப தார முங்கொடுகண்ணுறுவ ராம லின்பமொடெனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறைவன்னியும ராவு கொன்றையர்செம்மணிகு லாவு மெந்தையர்குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலைவிண்ணுறவில் வாளி யுந்தொடுதெய்விகபொ னாழி வண்கையன்மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிடசண்முகம தாகி வன்கிரிதுள்ளிடவெ லாயு தந்தனைவிடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரிமுல்லைவட வாயில் வந்தருள்துல்யபர ஞான வும்பர்கள்பெருமாளே.
