பாடல் 682
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
- ராகம்
- மோஹனம்
- தாளம்
- அங்கதாளம் (6 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2தனதய்ய தானன தானனதனதய்ய தானன தானனதனதய்ய தானன தானனதனதான
பாடல் வரிகள்
அணிசெவ்வி யார்திரை சூழ்புவிதனநிவ்வி யேகரை யேறிடஅறிவில்லி யாமடி யேனிடரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளினமிருளில்லி லேயிடு மோவுனதருளில்லை யோஇன மானவையறியேனே
குணவில்ல தாமக மேரினையணிசெல்வி யாயரு ணாசலகுருவல்ல மாதவ மேபெறுகுணசாத
குடிலில்ல மேதரு நாளெதுமொழிநல்ல யோகவ ரேபணிகுணவல் வாசிவ னேசிவகுருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொடமர்கள்ளி கானக நாடகபரமெல்லி யார்பர மேசுரிதருகோவே
படரல்லி மாமலர் பாணமதுடைவில்லி மாமத னாரனைபரிசெல்ரவி யார்மரு காசுரமுருகேசா
மணமொல்லை யாகி நகாகனதனவல்லி மோகன மோடமடர்மகிழ்தில்லை மாநட மாடினரருள்பாலா
மருமல்லி மாவன நீடியபொழில் மெல்லி காவன மாடமைவடமுல்லை வாயிலின் மேவியபெருமாளே.
