பாடல் 666
அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
- தலம்
- வேலுர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தாத்தன தானா தானனதனன தாத்தன தானா தானனதனன தாத்தன தானா தானனதந்ததான
பாடல் வரிகள்
அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்ரசனை காட்டிக ளீயார் கூடினும்அகல வோட்டிகள் மாயா ரூபிகள்நண்புபோலே
அசட ராக்கிகள் மார்மே லேபடுமுலைகள் காட்டிகள் கூசா தேவிழும்அழகு காட்டிக ளாரோ டாகிலுமன்புபோலே
சதிர தாய்த்திரி வோயா வேசிகள்கருணை நோக்கமி லாமா பாவிகள்தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள்நம்பொணாத
சரச வார்த்தையி னாலே வாதுசெய்விரக மாக்கி விடர்மு தேவிகள்தகைமை நீத்துன தாளே சேர்வதும்எந்தநாளோ
மதுரை நாட்டினி லேவாழ் வாகியஅருகர் வாக்கினி லேசார் வாகியவழுதி மேற்றிரு நீறே பூசிநி .....மிர்ந்துகூனும்
மருவு மாற்றெதிர் வீறே டேறிடஅழகி போற்றிய மாறா லாகியமகிமையாற் சமண் வேரோ டேகெடவென்றகோவே
புதிய மாக்கனி வீழ்தே னுறல்கள்பகலி ராத்திரி யோயா ஆலைகள்புரள மேற்செல வூரூர் பாயஅணைந்துபோதும்
புகழி னாற்கடல் சூழ்பார் மீதினிலளகை போற்பல வாழ்வால் வீறியபுலவர் போற்றிய வேலுர் மேவியதம்பிரானே.
