உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 652

மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்

தலம்
காசி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தத் தனதன தானன தானனதந்தத் தனதன தானன தானனதந்தத் தனதன தானன தானனதனதான

பாடல் வரிகள்

மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்பங்கப் படமிசை யேபனி போல்மதம்வந்துட் பெருகிட வேவிதி யானவனருள்மேவி

வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பலபந்துப் பனைபழ மோடிள நீர்குடமண்டிப் பலபல வாய்வினை கோலுமவழியாலே

திங்கட் பதுசெல வேதலை கீழுறவந்துப் புவிதனி லேமத லாயெனசிந்தைக் குழவியெ னாவனை தாதையுமருள்கூரச்

செம்பொற் றடமுலை பால்குடி நாள்பலபண்புத் தவழ்நடை போய்வித மாய்பலசிங்கிப் பெருவிழி யாரவ மாயதிலழிவேனோ

அங்கைத் தரியென வேயொரு பாலகனின்பக் கிருபைய தாயொரு தூண்மிசைஅம்பற் கொடுவரி யாயிரண் யாசுரனுடல்பீறி

அண்டர்க் கருள்பெரு மான் முதி ராவணிசங்குத் திகிரிக ரோனரி நாரவரங்கத் திருவணை மேல்துயில் நாரணன்மருகோனே

கங்கைச் சடைமுடி யோனிட மேவியதங்கப் பவளொளி பால்மதி போல்முககங்குற் றரிகுழ லாள்பர மேசுரியருள்பாலா

கந்துப் பரிமயில் வாகன மீதிருகொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்கங்கைப் பதிநதி காசியில் மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →