பாடல் 650
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
- தலம்
- திருக்கோணமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தானன தனத்தான தானனதனத்த தானன தனத்தான தானனதனத்த தானன தனத்தான தானனதனதான
பாடல் வரிகள்
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலைதரித்த வாடையு மணிப்பூணு மாகவெமினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெமயலுறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளொரெதிர்நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுலவெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படுகொடியேனைக்
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகுபிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனைகவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயுமொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுகுழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெகழற்கு ளாகவெ சிறப்பான தாயருள்தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்திருக்கு மாரனெ முகத்தாறு தேசிகவடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ்தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வருமுருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுரநிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெயெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறிநினைத்த காரிய மநுக்கூல மேபுரிபெருமாளே.
