பாடல் 642
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
- தலம்
- கதிர்காமம்
- ராகம்
- காபி
- தாளம்
- ஆதி - கண்டநடை (20)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - அதீதம்)தனத்தா தனத்தா தனத்தா தனத்தாதனத்தா தனத்தாதனதான
பாடல் வரிகள்
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தேசமர்த்தா யெதிர்த்தேவருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்தகர்த்தா யுடற்றானிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்செகுத்தாய் பலத்தார்விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்திருத்தா மரைத்தாளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்பொரத்தா னெதிர்தேவருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்பொரித்தார் நுதற்பார்வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்கருத்தார் மருத்தூர்மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தேகதிர்க்காம முற்றார்முருகோனே
