பாடல் 639
எதிரி லாத பத்தி ...... தனைமேவி
- தலம்
- கதிர்காமம்
- ராகம்
- சக்ரவாஹம்
- தாளம்
- திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - /3 0)தனன தான தத்ததனதான
பாடல் வரிகள்
எதிரி லாத பத்திதனைமேவி
இனிய தாள்நி னைப்பையிருபோதும்
இதய வாரி திக்குளுறவாகி
எனது ளேசி றக்கஅருள்வாயே
கதிர காம வெற்பிலுறைவோனே
கனக மேரு வொத்தபுயவீரா
மதுர வாணி யுற்றகழலோனே
வழுதி கூனி மிர்த்தபெருமாளே.
