பாடல் 624
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
- தலம்
- குன்றக்குடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தனதனன தனதனன தனதனனதந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன--------- 3 முறை -------------தனதானா
பாடல் வரிகள்
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடையதந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள
அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ
களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரியஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக் கருத்துமதனபிஷேகங்
கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவஇன்பச் சுடர்க்கனக கும்பத் தரச்செருவ
பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வ
கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வமுலைமாதர்
வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமதமொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெனும்புட் குரற்பகர வம்புற்ற மற்புரிய
வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் சமத்துநகநுதிரேகை
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற் றணைத்தவதி
செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்உந்திப் பிறப்பறநி னைந்திட்ட முற்றுனடி
வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமரதுன்றட்ட சிட்டகுண குன்றக் குடிக்கதிபஅருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகுதங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெணசங்கச் சகச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனனதந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனனதனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதிதங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணிடண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரிதன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரியெனதாளந்
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலைமண்டைத் திரட்பருகு சண்டைத் திரட்கழுகு
துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகெனவந்துற் றிடக்குடர்நி ணந்துற் றிசைத்ததிரமுதுபேய்கள்
சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்வெங்குக் குடத்தகொடி துங்குக் குகுக்குகென
வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவிதிங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்மிண்டைக் குலைத்தமர்செய் தண்டர்க் குரத்தையருள்பெருமாளே.
