பாடல் 613
கருடன் மிசைவரு கரிய புயலென
- தலம்
- குருடிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனன தனதனதனன தனதனதனதான
பாடல் வரிகள்
கருடன் மிசைவரு கரிய புயலெனகமல மணியெனவுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமதுகருதி முதுமொழிகளைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்செவியில் நுழைவனகவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவதுசிறிது முணர்வகையறியேனே
வருடை யினமது முருடு படுமகில்மரமு மருதமுமடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரைவழிய வகைவகைகுதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவடகுவடு தவிடெழமயிலேறுங்
குமர குருபர திமிர தினகரகுறைவி லிமையவர்பெருமாளே.
