உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 611

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த

தலம்
ஊதிமலை
தாளம்
அங்கதாளம் (5 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான

பாடல் வரிகள்

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்தஆவுடைய மாது தந்தகுமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்றுஆளுமுனை யேவ ணங்கஅருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்துபூரணசி வாக மங்களறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்துபோகமுற வேவி ரும்பிமடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்துநீதிநெறி யேவி ளங்கவுபதேச

நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ரநீலமயி லேறி வந்தவடிவேலா

ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்துஊழியுணர் வார்கள் தங்கள்வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்தஊதிமலை மீது கந்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →