உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 607

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்

தாளம்
கண்டசாபு (2 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தய்யதன தானந்த தய்யதன தானந்ததய்யதன தானந்ததனதான

பாடல் வரிகள்

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்சொல்லுகுண மூவந்தமெனவாகி

துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்துதொய்யுபொரு ளாறங்கமெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்பல்குதமிழ் தானொன்றியிசையாகிப்

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்தபெளவமுற வேநின்றதருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்புகல்லுருக வேநின்றகுழலு஡துங்

கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தைகைதொழமெய்ஞ் ஞானஞ்சொல்கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்றுகொள்ளைகொளு மாரன்கையலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்தகொல்லிமலை மேனின்றபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →