உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 604

பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தத்தத் தத்தத் தத்தத்தத்தத்தத் தத்தத் தத்தத்தத்தத்தத் தத்தத் தத்தத்தனதான

பாடல் வரிகள்

பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்கச்சிட்டுக் கட்டிப் பத்மப்புட்பத்துக் கொப்பக் கற்பித்திளைஞோர்கள்

புட்பட்டுச் செப்பத் துப்பற்கொத்தப்பொற் றித்தத் திட்பப்பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத்தனமானார்

கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்தத்திற்புக் கிட்டப் பட்டுக்கைக்குத்திட் டிட்டுச் சுற்றித்திரியாமல்

கற்றுற்றுச் சித்திக் கைக்குச்சித்திப்பப் பக்ஷத் திற்சொற்கற்பித்தொப் பித்துக் கொற்றக்கழல்தாராய்

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்துக்கச்சத் துக்குக் குக்குக்குக்குக்குக் குக்குக் குக்குக்கெனமாறா

குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்கக்ஷத்திற் பட்சத் தத்தக்கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக்குடதாரி

சற்சித்துத் தொற்புத் திப்பட்சத்தர்க்கொப் பித்தட் சத்துச்சத்தத்தைச் சத்திக் கொச்சைப்பதிவாழ்வே

தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்செற்பற்றைச் செற்றிட் டுச்சச்சற்பப்பொற் றைக்குட் சொக்கப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →