பாடல் 563
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
- தலம்
- திருக்கற்குடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்தனத்தத் தனத்தத்தனதான
பாடல் வரிகள்
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்குவட்டைச் செறுத்துக்ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்குருத்தத் துவத்துத்தவர்சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்புறப்பட்ட கச்சுத்தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்புரித்துப் பதத்தைத்தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்கருத்திச்சை யுற்றுப்பரிவாகக்
கனக்கப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட்கடைப்பட்டு நிற்கைக்குரியோனே
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்தழைப்பித்த கொற்றத்தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்தருக்கற் குடிக்குப்பெருமாளே.
