பாடல் 552
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
- தலம்
- திருசிராப்பள்ளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தத்தம் தனதன தத்தம்தனதன தத்தம்தனதான
பாடல் வரிகள்
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்பவளவெண் முத்தந்திரமாகப்
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்பரிவென வைக்கும்பணவாசை
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்டழியும வத்தன்குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்டலைதலொ ழித்தென்றருள்வாயே
சகலரு மெச்சும் பரிமள பத்மந்தருணப தத்திண்சுரலோகத்
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்தழுவஅ ணைக்குந்திருமார்பா
செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்திகுதிகெ னெப்பொங்கியவோசை
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்சிரகிரி யிற்கும்பெருமாளே.
