பாடல் 550
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்
- தலம்
- திருசிராப்பள்ளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தானான தானன தனதன தானான தானனதனதன தானான தானனதந்ததான
பாடல் வரிகள்
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்அசடிகள் மாலான காமுகர்பொன்கொடாநாள்
அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள்அறுதியில் காசாசை வேசைகள்நஞசுதோயும்
விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும்விலையிடு மாமாய ரூபிகள்பண்பிலாத
விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள்வினைசெய லாலேயெ னாவியுயங்கலாமோ
வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதயவயலியில் வேலாயு தாவரையெங்குமானாய்
மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோ ரெணாயிரர்மறிகழு மீதேற நீறுபரந்துலாவச்
செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனிசிவசிவ மாதேவ காவெனவந்துபாடும்
திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர்சிரகிரி வாழ்வான தேவர்கள்தம்பிரானே.
