பாடல் 519
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
- தலம்
- கயிலைமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தனத்த தனத்த தனத்ததனத்த தனத்ததனதான
பாடல் வரிகள்
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டிநடித்து விதத்திலதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கிநலத்தி லணைத்துமொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கைதிரட்டி யெடுத்துவரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்தெவிட்டு கலைக்குள்விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்துபடர்ச்சி கறுத்தமயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்தபதத்த கனத்ததனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்துவெளுத்த பொருப்பிலுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்கம்ருகத்தை யெடுத்தொர்பெருமாளே.
