பாடல் 51
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
- தலம்
- திருச்செந்தூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தத் தனனத் தந்தத் தனனத்தந்தத் தனனத்தனதானா
பாடல் வரிகள்
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்கொண்டற் குழலிற்கொடிதான
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்கொஞ்சுக் கிளியுற்றுறவான
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்சந்திப் பவரைச்சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்சந்தப் பதம்வைத்தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்கந்திக் கடலிற்கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்றஞ்சப் பொருதுற்றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்சென்றுற் றவர்தற்பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்செந்திற் குமரப்பெருமாளே.
