பாடல் 508
பனிபோ லத்துளி சலவா யுட்கரு
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனா தத்தன தனனா தத்தனதனனா தத்தனதனதான
பாடல் வரிகள்
பனிபோ லத்துளி சலவா யுட்கருபதின்மா தத்திடைதலைகீழாய்ப்
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடிபயில்வா ருத்தியில்சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்சதிகா ரச்சமன்வருநாளிற்
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படிதளர்மா யத்துயரொழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்விகடா ருக்கிடவிடும்வேலா
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழமிகவே குட்டியகுருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகுநிழலாள் பத்தினிமணவாளா
நிதியா மிப்புவி புலியூ ருக்கொருநிறைவே பத்தர்கள்பெருமாளே.
