பாடல் 464
தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனந்தந்தம் தனந்தந்தம்தனந்தந்தம் தனந்தந்தம்தனந்தந்தம் தனந்தந்தம்தனதான
பாடல் வரிகள்
தியங்குஞ்சஞ் சலந்துன்பங்கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்த்ரியம்பந்தந் தருந்துன்பம்படுமேழை
திதம்பண்பொன் றிலன்பண்டன்தலன்குண்டன் சலன்கண்டன்தெளிந்துன்றன் பழந்தொண்டென்றுயர்வாகப்
புயங்கந்திங் களின்துண்டங்குருந்தின்கொந் தயன்றன்கம்பொருந்துங்கங் கலந்தஞ்செஞ்சடைசூடி
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்புலம்பும்பங் கயந்தந்தென்குறைதீராய்
இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்சுணங்கன்செம் பருந்தங்கங்கிணங்குஞ்செந் தடங்கண்டுங்களிகூர
இடும்பைங்கண் சிரங்கண்டம்பதந்தந்தங் கரஞ்சந்தொன்றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ்செயும்வேலா
தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்தனந்தந்தந் தனந்தந்தந்தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ்சிறுகூரா
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்தலந்துன்றம் பலந்தங்கும்பெருமாளே.
