பாடல் 417
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானதத்த தானதன தானதத்ததானதன தானதத்ததனதான
பாடல் வரிகள்
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்றுகேவலம தானஅற்பநினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்தகேடுறுக வேநினைக்கும்வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்மேதினியெ லாமுழற்றுமடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்துவீறுமயில் மீதிலுற்றுவருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்துநீடுபுகழ் தேவரிற்கள்குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்தநீலநிற மால்தனக்குமருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்சோபைவட கோபுரத்திலுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றிதோளின்மிசை வாளெடுத்தபெருமாளே.
