உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 355

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி

ராகம்
பூபாளம்
தாளம்
சதுஸ்ர ஏகம் (திஸ்ரநடை) (6)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

எடுப்பு - அதீதம்தனத்த தான தானான தனத்த தான தானானதனத்த தான தானானதனதான

பாடல் வரிகள்

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசியடைதலந வாயு வோடாதவகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாசஅசட்டு யோகி யாகாமல்மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசாரசிரத்தை யாகி யான்வேறெனுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீதசிவச்சொ ரூபமாயோகியெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபாலசுதற்கு நேச மாறாதமருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபாலதொடுத்த நீப வேல்வீரவயலுரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரிமகப்ர வாக பானீயமலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாருமதித்த சாமி யேதேவர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →