உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 339

கரும மானபி றப்பற வொருகதி

ராகம்
பெஹாக்
தாளம்
அங்கதாளம் (15 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தத்தன தனதனதானா தத்தத்தனதான

பாடல் வரிகள்

கரும மானபி றப்பற வொருகதிகாணா தெய்த்துத்தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்நானா வர்க்கக்கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதமனோபா வத்துக்கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினைமாயா மற்குப்புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலசகாதே வர்க்குப்புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடுநாளோர் பத்தெட்டினிலாளுங்

குரும கீதல முட்பட வுளமதுகோடா மற்க்ஷத்ரியர்மாளக்

குலவு தோர்கட வச்சுதன் மருககுமாரா கச்சிப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →