பாடல் 334
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
- தலம்
- காஞ்சீபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத்தனதான
பாடல் வரிகள்
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்சத்தப் படுமைக்கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்தட்டுப் படுமப்பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்சித்ரக் கொடியுற்றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்செச்சைத் தொடையைத்தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்குத்திக் கிரியைப்பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்கொச்சைக் குறவிக்கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்துக்கத் தையொழித்திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்சொக்கப் பதியிற்பெருமாளே.
