பாடல் 330
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
- தலம்
- காஞ்சீபுரம்
- ராகம்
- பெஹாக்
- தாளம்
- அங்கதாளம் (6)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தத்தத் தத்தத்தனதான
பாடல் வரிகள்
முட்டுப் பட்டுக்கதிதோறும்முற்றச் சுற்றிப்பலநாளும்
தட்டுப் பட்டுச்சுழல்வேனைச்சற்றுப் பற்றக்கருதாதோ
வட்டப் புட்பத்தலமீதேவைக்கத் தக்கத்திருபாதா
கட்டத் தற்றத்தருள்வோனேகச்சிச் சொக்கப்பெருமாளே.
-----------
