உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 327

கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத்தனதான

பாடல் வரிகள்

கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்கருத்திற்கட் பொருட்பட்டுப்பயில்காலங்

கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்கயிற்றிட்டுப் பிடித்திட்டுச்சமனாவி

பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்பிணத்தைச்சுட் டகத்திற்புக்கனைவோரும்

பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்பிறப்புப்பற் றறச்செச்சைக்கழல்தாராய்

பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்புனக்கொச்சைக் குறத்தத்தைக்கினியோனே

புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்புணர்த்தப்பித் தனைக்கற்பித்தருள்வோனே

செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்சினத்திட்டுச் சிதைத்திட்டுப்பொரும்வீரா

திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்திருக்கச்சிப் பதிச்சொக்கப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →