பாடல் 292
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனுமெனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரெனமுதலை மடுவினி லதவிய புயலெனமுகமு மறுமுக முடையவ னிவனெனவறியோரைச்
சகல பதவியு முடையவ ரிவரெனதனிய தநுவல விஜயவ னிவனெனதபனன் வலம்வரு கிரிதனை நிகரெனஇசைபாடிச்
சயில பகலவ ரிடைதொறு நடைசெயுமிரவு தவிரவெ யிருபத மடையவெசவித அடியவர் தவமதில் வரவருள்புரிவாயே
அகில புவனமு மடைவினி லுதவியஇமய கிரிமயில் குலவரை தநுவெனஅதிகை வருபுர நொடியினி லெரிசெய்தஅபிராமி
அமரு மிடனன லெனுமொரு வடிவுடையவனி லுரையவன் முதுதமி ழுடையவனரியொ டயனுல கரியவ னடநவில்சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபடதிரைக ளெறிகடல் சுவறிட களமிசைதிரடு குறடுகள் புரள்வெகு குருதிகள்பெருகாறாச்
சிகர கிரிநெரி படபடை பொருதருள்திமிர தினகர குருபர இளமயில்சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ்பெருமாளே.
