உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 276

தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனதான

பாடல் வரிகள்

தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள்முழுமோசந்

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்துமித்த மித்திரர் விலைமுலை யினவலைபுகுதாமல்

அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்தரித்த வித்ரும நிறமென வரவுடனழைத்து சக்கிர கிரிவளை படிகொடுவிளையாடி

அவத்தை தத்துவ மழிபட இருளறைவிலக்கு வித்தொரு சுடரொளி பரவநலருட்பு கட்டியு னடியிணை யருளுவதொருநாளே

படைத்த னைததையும் வினையுற நடனொடுதுடைத்த பத்தினி மரகத சொருபியொர்பரத்தி னுச்சியி னடநவி லுமையருளிளையோனே

பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்தொடுத்த சக்கிர வளைகர மழகியர்படிக்க டத்தையும் வயிறடை நெடியவர்மருகோனே

திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபடகொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வருமயில்வீரா

தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →