உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 248

எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ

தாளம்
ஆதி (எடுப்பு 3/4 இடம்)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனதான

பாடல் வரிகள்

எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொடழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழுவிருக்கும் வீடதி லெத்தனை தத்துவசதிகாரர்

இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதியுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புடனிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறுசமுசாரம்

கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர்கொலைகாரர்

கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்களவரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணிகெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவணுழல்வேனோ

ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்களமெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரியுடைத்து வானவர் சித்தர்து தித்திடவிடும்வேலா

உலுத்த ராவண னைச்சிர மிற்றிடவதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன்மருகோனே

வலிக்க வேதனை குட்டிந டித்தொருசெகத்தை யீனவள் பச்சைநி றத்தியைமணத்த தாதைப ரப்ரம ருக்கருள்குருநாதா

வனத்தில் வாழும யிற்குல மொத்திடுகுறத்தி யாரைம யக்கிய ணைத்துளமகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →