பாடல் 238
விழியால் மருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
- தலம்
- சுவாமி மலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்ததனனா தனத்த தந்ததனதான
பாடல் வரிகள்
விழியால் மருட்டி நின்று முலைதூச கற்றி மண்டுவிரகான லத்த ழுந்தநகையாடி
விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்சவிளையாட லுக்கி சைந்துசிலநாள்மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்தமுழுமாயை யிற்பி ணங்கள்வசமாகி
முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்றுமுதிராத நற்ப தங்கள்தருவாயே
பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்றுபொருதாளெ டுத்த தந்தைமகிழ்வோனே
புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்டபுனிதாம்ரு கக்க ரும்புபுணர்மார்பா
செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்றுதிருவாய்மை செப்பி நின்றமுருகோனே
திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்றதிருவேர கத்த மர்ந்தபெருமாளே.
