உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 223

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

தாளம்
அங்கதாளம் (5 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தானான தான தத்த தானான தான தத்ததானான தான தத்ததனதான

பாடல் வரிகள்

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்துநாலாறு நாலு பற்றுவகையான

நாலாரு மாக மத்தி னுலாய ஞான முத்திநாடோ று நானு ரைத்தநெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்கநேராக வாழ்வ தற்குனருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தைநீகாணெ னாவ னைச்சொலருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்திசீராக வேயு ரைத்தகுருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டுதீராகு காகு றத்திமணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்தகாவார்சு வாமி வெற்பின்முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்திகாமாரி வாமி பொற்றபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →