பாடல் 207
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
- தலம்
- சுவாமி மலை
- ராகம்
- சக்ரவாஹம்
- தாளம்
- அங்கதாளம் (8 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம்தனதான
பாடல் வரிகள்
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ்சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந்திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்கருவினையொ டருமலமு நீறு கண்டுதண்டருமாமென்
கருணைபொழி கமலுமுக மாறு மிந்துளந்தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந்தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்திகழருண கிரிசொருப னாதி யந்தமங்கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும்புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந்திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம்பெருமாளே.
