உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 196

வாதம் பித்தமி லாவயி றீளைகள்

தலம்
பழநி
தாளம்
ஆதி - 2 களை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானந் தத்தன தானன தானனதானந் தத்தன தானன தானனதானந் தத்தன தானன தானனதனதான

பாடல் வரிகள்

வாதம் பித்தமி லாவயி றீளைகள்சீதம் பற்சனி சூலைம கோதரமாசங் கட்பெரு மூலவி யாதிகள்குளிர்காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடுந் தத்துவ காரர்தொ ணு஡றறுவாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள்வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொடேதுஞ் சற்றுண ராமலே மாயைசெய்சோரம் பொய்க்குடி லேசுக மாமெனஇதின்மேவித்

தூசின் பொற்சர மோடுக லாயுலகேழும் பிற்பட வோடிடு மூடனைதூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமிடுடுண் டுட்டுடு டூடுடு டூடுடுசேசெஞ் செக்கெண தோதக தீகுடவெனபேரி

சேடன் சொக்கிட வேலைக டாகமெலாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரிதீவும் பொட்டெழ வேயனல் வேல்விடுமயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிநலீசன் சற்குரு வாயவர் காதினில்மேவும் பற்றிலர் பேறரு ளோதியமுருகோனே

வேஷங் கட்டிபி னேகிம காவளிமாலின் பித்துற வாகிவி ணோர்பணிவீரங் கொட்பழ னாபுரி மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →