உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 175

பாரி யானகொடைக் கொண்ட லேதிரு

தலம்
பழநி
தாளம்
அங்கதாளம் (7 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1,தகிட-1 1/2, தகதிமி-2தான தானதனத் தந்த தானனதான தானதனத் தந்த தானனதான தானதனத் தந்த தானனதனதான

பாடல் வரிகள்

பாரி யானகொடைக் கொண்ட லேதிருவாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழுபாரு மேறுபுகழ்க் கொண்ட நாயகஅபிராம

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்சீல ஞாலவிளக் கின்ப சீவகபாக சாதனவுத் துங்க மானதஎனவோதிச்

சீர தாகஎடுத் தொன்று மாகவிபாடி னாலுமிரக் கஞ்செ யாதுரைசீறு வார்கடையிற் சென்று தாமயர்வுறவீணே

சேய பாவகையைக் கொண்டு போயறியாம லேகமரிற் சிந்து வார்சிலர்சேய னார்மனதிற் சிந்தி யாரருகுறலாமோ

ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடுவாயி னேர்படவுற் றன்று மூலமெனார வாரமதத் தந்தி தானுயஅருள்மாயன்

ஆதி நாராணனற் சங்க பாணியனோது வார்களுளத் தன்பன் மாதவனான நான்முகனற் றந்தை சீதரன்மருகோனே

வீர சேவகவுத் தண்ட தேவகுமார ஆறிருபொற் செங்கை நாயகவீசு தோகைமயிற் றுங்க வாகனமுடையோனே

வீறு காவிரியுட் கொண்ட சேகரனான சேவகனற் சிந்தை மேவியவீரை வாழ்பழநித் துங்க வானவர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →