பாடல் 166
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
- தலம்
- பழநி
- ராகம்
- செஞ்சுருட்டி
- தாளம்
- சதுஸ்ர த்ருவம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
எடுப்பு /4/4/40, கண்டநடை (35)தனதனன தத்தான தானான தானதனதனதனன தத்தான தானான தானதனதனதனன தத்தான தானான தானதனதனதான
பாடல் வரிகள்
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிதுபரிகரி யெனக்காது கேளாது போலுமவர்சரியும்வய துக்கேது தாணர்சொ லீரெனவும்விதியாதே
உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர்வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரணமுனதடியி னிற்சூட வேநாடு மாதவர்களிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்வழிபட எனக்கேத யாவோடு தாளுதவஉரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசைவரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனைமணிமுடி துணித்தாவி யேயான ஜானகியைஅடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனுமருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனைமழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறையிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறுமணவாளா
பதுமவய லிற்பூக மீதேவ ரால்கள் துயில்வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்பழநிவரு கற்பூர கோலாக லாவமரர்பெருமாளே.
