பாடல் 162
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தானந்த தனன தான தானந்த தனன தானதானந்த தனன தானதனதான
பாடல் வரிகள்
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாதநாடண்டி நமசி வாயவரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாயநாதங்க ளொடுகு லாவிவிளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாமலோமங்கி யுருவ மாகியிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறிலோகங்கள் வலம தாடஅருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணிசீரங் னெனது தாதைஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதிசேர்பங்கி னமல நாதனருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீலகாடந்த மயிலி லேறுமுருகோனே
காமன்கை மலர்கள் நாண வேலம்பெ ணமளி சேர்வைகாணெங்கள் பழநி மேவுபெருமாளே.
