பாடல் 13
சந்ததம் பந்தத் ...... தொடராலே
- ராகம்
- ஹிந்தோளம்
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3தந்தனந் தத்தத்தனதான
பாடல் வரிகள்
சந்ததம் பந்தத்தொடராலேசஞ்சலந் துஞ்சித்திரியாதே
கந்தனென் றென்றுற்றுனைநாளும்கண்டுகொண் டன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பைப்புணர்வோனேசங்கரன் பங்கிற்சிவைபாலா
செந்திலங் கண்டிக்கதிர்வேலாதென்பரங் குன்றிற்பெருமாளே.
