பாடல் 1298
பரவைக் கெத்தனை ...... விசைதூது
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ராமப்பரியா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர ஏகம் (3)தனனத் தத்தனதனதான
பாடல் வரிகள்
பரவைக் கெத்தனைவிசைதூது
பகரற் குற்றவரெனமாணுன்
மரபுக் குச்சிதப்ரபுவாக
வரமெத் தத்தரவருவாயே
கரடக் கற்பகனிளையோனே
கலைவிற் கட்குறமகள்கேள்வா
அரனுக் குற்றதுபுகல்வோனே
அயனைக் குட்டியபெருமாளே.
