பாடல் 1274
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- பாகேஸ்ரீ
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2தனதன தானத் தானன தனதன தானத் தானனதனதன தானத் தானனதனதான
பாடல் வரிகள்
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரிமுகுளப டீரக் கோமளமுலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினைமுதியபு ராரிக் கோதியகுருவேயென்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியுமுணர்வினோ டூடிக் கூடியும்வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினியுனதடி யாரைச் சேர்வதுமொருநாளே
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்வரவிடு மாயப் பேய்முலைபருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனிமதுகையில் வீழச் சாடியசதமாபுட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொருசகடுதை யாமற் போர்செய்துவிளையாடிப்
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுதபுரமதில் மாபுத் தேளிர்கள்பெருமாளே.
