பாடல் 1264
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானன தானன தந்த தானன தானன தந்ததானன தானன தந்ததனதான
பாடல் வரிகள்
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்துபூசைகள் யாதுநி கழ்ந்துபிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டுபூரணி காரணி விந்துவெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்துஞானசு வாச முணர்ந்துவொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்தநாயகர் பாதமி ரண்டுமடைவேனோ
மாதுசர் வேஸ்வரிவஞ்சி காளிபி டாரிவி பஞ்சிவாணிவ ராகிம டந்தையபிராமி
வாழ்சிவ காம சவுந்த்ரியாலமெ லாமுக பஞ்சவாலைபு ராரியி டந்தகுமையாயி
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கைமேலொடு கீழுல கங்கள்தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்றவேணியர் நாயகி தந்தபெருமாளே.
