உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1247

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத்

ராகம்
ஆபோகி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - சதுஸ்ர த்ருவம் (14)(எடுப்பு - /4/4 0/4)தனதன தனதன தனதன தனதன தனதனதனதான

பாடல் வரிகள்

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறியபரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடுசருவாநின்

றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுதுவெனுமாறற்

றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனுமுணர்வேனோ

குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபடவுரகேசன்

கொடுமுடி பலநெரிதரநெடு முதுகுரை கடல்புனல்வறிதாகத்

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசிசரர்சேனை

துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவலபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →