பாடல் 1241
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- கல்யாணி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - கண்டசாபு (2 1/2)தனதான தந்ததன தனதான தந்ததனதனதான தந்ததனதனதான
பாடல் வரிகள்
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவிசிவபோக மன்பருகஅறியாமற்
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொதுதிகழ்மாதர் பின்செருமியழிவேனோ
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடுதயவாய்ம கிழ்ந்துதினம்விளையாடத்
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலறததிநாளும் வந்ததென்முன்வரவேணும்
உ வகாரியன்பர்பணி கலியாணி யெந்தையிடமுறைநாய கங்கவுரிசிவகாமி
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியையொருநாள்ப கிர்ந்தவுமையருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகுமமுதால யம்பதவியருள்வோனே
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்அயிலாபு கழ்ந்தவர்கள்பெருமாளே.
