பாடல் 124
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 (திஸ்ர ரூபகம்)தனதன தனன தான தனதன தனன தானதனதன தனன தானதனதான
பாடல் வரிகள்
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்ஒருகுண வழியு றாதபொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடிஉறநம னரகில் வீழ்வரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடிமறைவரி னனைய கோலமதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறுவடிவுற அருளி பாதமருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்திருவிழி யருள்மெய்ஞ் ஞானகுருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோததிருநட மருள நாதனருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடிதுகளேழ விடுமெய்ஞ் ஞானஅயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதிதொழமுது பழநி மேவுபெருமாளே.
